17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீராணம் பகுதி ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி-மு.க ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் படி வழங்கல்…

வீராணம் பகுதி ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி-மு.க ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் படி வழங்கல்…

எழுதியவர்: Askar April 22, 2020, 10:25 pm

வீராணம் பகுதி ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி-மு.க ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் படி வழங்கல்…

ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் படி வீராணம் பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. உதவிகளை அய்யாத்துரை பாண்டியன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் வீராணத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலை இழந்து வருமானமில்லாமல் உணவிற்கு சிரமப்படும் ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ளோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.மேலும் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தையும் அறிவித்தார். அதன்படி மாநில வர்த்தக அணி துணை தலைவரும் அய்யாத்துரை பாண்டியன் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் சானிடைசர் வழங்கி உள்ளார். அதன்‌ முதல் கட்டமாக சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் உள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து நடந்தது. அதில் டாக்டர். அய்யாத்துரை பாண்டியன் கொரோனா நிவாரண உதவி மற்றும் முககவசம் வழங்கியதோடு, கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.முன்னதாக தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமலும், தவிர்க்க முடியாத நிலையில் வெளியே வந்தாலும் முககவசம், கையுறை அணிந்து வரவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும் வேண்டும். கொரோனாவை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட வர்த்தகர்அணி அமைப்பாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் அணி முத்துராமலிங்கம், ஓய்வு பெற்ற புலனாய்வு பிரிவு எஸ்ஐ பழனிச்சாமி, தினகரன், பூதப்பாண்டி, , நெல்லை ரமேஷ், , பசுபதி பாண்டியன், செந்தில், ஆகாஷ் பாண்டியன், மாரிச்செல்வம், வீராணம் இளைஞர்அணி பூலோகராஜ், முகமதுஅலி, முத்துபாண்டியன்,

சுரண்டை பேரூர் கழக நிர்வாகிகள் அ.சக்தி பி.பரமசிவன் எஸ்..பூல்பாண்டியன் மு.ஜெயராஜ் ஏஏ.ரத்தினசாமி, அருணா ஜோதிடர் இசக்கி ஆலங்குளம் வடக்கு ஒன்றிய  மாணவரணி செயலாளர் முகமது அலி, முன்னாள் நெசவாளர் அணி செயலாளர் முகமது அப்துல், முன்னாள் கிளை கழக செயலாளர் பரமசிவன், முத்து பாண்டியன், நாட்டாமை,அன்னராஜ்,  லெனின் ராமமூர்த்தி, பூலியப்பன்,வினோத். பூசைதுரை, மு.வேல் முருகன், மருது பாண்டி, தங்க பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி வசதிகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதல் படி மாவட்டம் முழுவதும் உள்ள கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!