உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனரஅவ்வாறு தேவையில்லாமல் வெளியே
வந்து ஊர் சுற்றுபவர்களை போலிசார் மடக்கி வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்கின்றனர்.இதனால் வெளியே வெளியே சுற்ற முடியாமல் வீட்டினுள்ளே முடக்கிக் கிடக்கும் சிறுவர்கள் இளைஞர்கள் தங்கள் வீட்டு மாடியில் நினறு பட்டம் பறக்க விடுவதை பொழுது போக்கு ஆக்கியுள்ளனர்.இதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டு மொட்டை மாடிகளில் கூட்டமாக நின்று பட்டம் விடுகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் மொட்டை மாடி சுவற்றில் ஏறி நிற்கின்றனர்.வீட்டை விட்டு வெளியில் ஊர் சுற்றாமல் வீட்டின் மாடிலேயே பட்டம் விடுவது ஆரோக்யமான விஷயம் என்றாலும் கூட்டம் சேராமலும் ஆபத்தான முறையில் மொட்டை மாடி சுவற்றில் ஏறாமலும் பாதுகாப்பான முறையில் பட்டம் விட்டாலே கொரோனாவையும் விபத்தையும் தவிர்த்து விடலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
ஊரடங்கு உத்தரவினால் வெளியில் வர முடியாத சிறுவர்கள் வீட்டு மாடிகளில் கூட்டமாக நின்று பட்டம் விடுவதை பொழுதை போக்குகின்றனர்.
எழுதியவர்: mohan April 22, 2020, 8:00 pm




You must be logged in to post a comment.