தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பார்வையிட்டு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.பின் ஊரடங்கால் வேலையிழந்துள்ள மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு வரும் மே 3ம் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக 3 வேளையும் உணவ வாங்கிக் கொள்ளலாம் என்றும் இதற்கான செலவை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஏற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.
பின்னர் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.இதில் அவர் பேசும் போது உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொணடு வரப்பட்டுள்ளதாகவும் எழுமலை பகுதியில் கொரோனா பாதித்தவர்கள் பகுதி தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்:டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி கோட்டாச்சியர் ராஜ்குமார் வட்டாச்சியர் செந்தாமரை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.