18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தங்கையின் மீதான பாசத்தால் 130 கிலோமீட்டர் நடந்தே சென்ற அண்ணன்…

தங்கையின் மீதான பாசத்தால் 130 கிலோமீட்டர் நடந்தே சென்ற அண்ணன்…

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2020, 7:15 pm

திண்டுக்கல் மாவட்டம் அரண்மனைகுளம் சிவன்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜோஷ்வா. இவர் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரானா வைரஸ் தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தர அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

இதனால் இளைஞர் ஜோஷ்வா வேலை பார்த்து வந்த நிறுவனமும் மூடப்பட்ட நிலையில், கையிருந்த சிறிது பணத்தை வைத்தும், மாவட்ட நிர்வாகம் கொடுத்த நிவாரண முகாமில் கொடுத்த உணவை சாப்பிட்டு வந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வர இன்று அதிகாலை கையில் இருந்த 100 ரூபாயுடன் தனது துணிகளை ஒரு சூட்கேஷில் (சாலையில் இழுத்து செல்லும்) எடுத்துக்கொண்டு சிவகங்கையிலிருந்து நடந்தே திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்ட இளைஞர் ஜோஷ்வா அதிகாலை நடக்க ஆரம்பித்து

இன்று (22/04/2020) காலை 10.20 மணி அளவில் மதுரை கோரிப்பாளைத்திற்கு வந்தடைந்தார். சிறிது நேரம் நிழலில் இளைப்பாறிவிட்டு மீண்டும் தனது உடல்நிலை சரியில்லாத தங்கையை காண திண்டுக்கல் நோக்கி நடக்க ஆரம்பித்தார். தங்கையின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அண்ணனான ஜோஷ்வா சிவகங்கையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் 130 கிலோமீட்டர் நடந்தே பயணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த இளைஞர் தங்கை மீது உள்ள பாசத்தால் நடந்து வருவதை தகவல் அறிந்த ரஜினி மன்ற மதுரை மாவட்ட துணை செய்யலாலர் அழகர்சாமி தொடர்பு கொண்டு அந்த இளைஞர்களுக்கு உதவிகள் செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!