17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் ஹாட்ஸ்பாட் என கண்டறியப்பட்டு தடை செய்யபட்ட பகுதியில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

இராஜபாளையத்தில் ஹாட்ஸ்பாட் என கண்டறியப்பட்டு தடை செய்யபட்ட பகுதியில் பணியாற்றிய போலீசாருக்கு கொரோனா பரிசோதனை

எழுதியவர்: mohan April 22, 2020, 7:15 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்டத்தின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இராஜபாளையம் பகுதியில் கொரோனா வைரஸ் 8 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து ஆண்டாள்புரம், சம்மந்தபுரம், சிங்கராஜ கோட்டை தெரு, ஆர்.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹாட்ஸ்பாட் என கண்டறியப்பட்டு அந்த பகுதிகள் தடைசெய்யப்பட்டது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின் பேரில் கொரோனா தொற்று உள்ளதா என ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி நாக சங்கர் மற்றும் நகர்நல அலுவலர் சரோஜா டாக்டர் கருணாகர பிரபு உள்ளிட்டோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது . அதுமட்டுமல்லாமல் சுகர் பிபி போன்ற அறிகுறிகளும் உள்ளதா என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் சளி மற்றும் இருமல் மூச்சுத்திணறல் போன்ற தொந்தரவு இருந்தால் ராஜபாளையம் அருகிலுள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!