தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் குடிமகன்கள் மது பாட்டில்கள் தேடி அலைகின்றனர். இதனால்,
கடந்த காலங்களில் சாராயம் காய்ச்சி விற்றவர்கள் தற்போது சாராயத் தொழிலை மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மண்டபம் அருகே பிள்ளைமடம் கிராமத்தில் பனந் தோப்பில் சாராயம் காய்ச்சப்படுவதாக மண்டபம் தனிப்பிரிவு காவலர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மண்டபம் சார்பு ஆய்வாளர் தலைமையில் போலீசார் கடற்கரை ஓரங்களில் உள்ள தோப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் பிள்ளைமடம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிந்தது. வெள்ளைச்சாமியை (51) கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்
மண்டபம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது
எழுதியவர்: mohan April 22, 2020, 7:07 pm




You must be logged in to post a comment.