செங்கம் அருகே பெற்ற தாய் தந்தையை அம்மிக்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன் போலீசார் வலைவீச்சு!
செங்கம் அருகே குப்பந்தாங்கல் அருந்ததியர் காலணியில், மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தனது தாய் தந்தையை அம்மிக்கல்லால் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம் .சாத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பம் தாங்கல் அருந்ததியர் காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகனான ராம்குமார் வயது 27 .இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தாய் தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தாய் தந்தை மறுத்துள்ளதால் கிணற்றில் விழுந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இன்று விடியற்காலை வெளியே வலம் வந்துவிட்டு அம்மிக்கல்லை எடுத்து தாய் தந்தையை உறங்கிக்கொண்டிருக்கும்போது அம்மிக்கல் லான் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி தப்பி ஓட்டம். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர் .தகவலறிந்த சாத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.