17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எல்லாம் எங்களுக்குத் தெரியும் எனக்கூறிய மும்பை, டெல்லி, சென்னை, பத்திரிகையாளர்களுக்கு கூட தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்:- மூத்த பத்திரிகையாளர் கதிரவன் எச்சரிக்கை..

எல்லாம் எங்களுக்குத் தெரியும் எனக்கூறிய மும்பை, டெல்லி, சென்னை, பத்திரிகையாளர்களுக்கு கூட தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்:- மூத்த பத்திரிகையாளர் கதிரவன் எச்சரிக்கை..

எழுதியவர்: Askar April 22, 2020, 9:35 am

எல்லாம் எங்களுக்குத் தெரியும் எனக்கூறிய மும்பை, டெல்லி, சென்னை, பத்திரிகையாளர்களுக்கு கூட தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்:- மூத்த பத்திரிகையாளர் கதிரவன் எச்சரிக்கை..

எத்தனை முறை கூறினாலும் யாரும் கேட்பதில்லை. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம் அல்லது நடந்து கொள்ளலாம் ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இருக்கலாம் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. யாராவது ஒருவர் தனது அறியாமையால் கூட எப்படியாவது யாரோடாவது தொடர்பில் இருந்திருக்கலாம் அது இப்போது நமக்குத் தெரியாது யாருக்கும் இருக்கும் என்று நான் கூறவரவில்லை இருக்கக்கூடாது என்பதே எனது எண்ணம். யாருக்கும் அதனால் பிரச்சனை வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கூற்று! ஆரம்பம் முதலே விழிப்புணர்வை கொடுத்து வருகிறேன் ஆனால் நீங்கள் மட்டும்தான் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறீர்கள்? கூட்டமாக இல்லாமல் இடைவெளிவிட்டு பேட்டி எடுத்தால் யாரும் தர மாட்டேன் என்று கூறுவார்களா.? அப்படி யாரும் கூறப்போவதில்லை, அப்படி இருந்தும் ஏன் நீங்கள் திருந்த மாட்டேன் என்கிறீர்கள். இப்படி கும்பலாக நிற்கலாமா ஒவ்வொரு விழாக்களிலும் இவ்வாறு நீங்கள் கும்பலாக இடைவெளி இல்லாமல் நிற்பது கண்டு அதிகாரிகள் எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்பது உங்களுக்கு யாருக்காவது தெரியுமா.? உங்களுக்கு மட்டும் பரவல் வராதா சமூக இடைவெளி விட மாட்டீர்களா அரசு உத்தரவை மதிக்க மாட்டீர்களா என்று கேவலமாக கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மளால் பிறருக்கோ பிறரால் நமக்கோ வரும் என்பது அல்ல! நாமும் முன்னுதாரணமாக அதுவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நம்மிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் இன்னும் நாம் ஆரம்பிக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எல்லாம் எனக்கு தெரியும் என்று மமதையில் இருப்பவர்கள் நாம் என்பது எனக்கு தெரியும். இது மட்டுமின்றி செய்தியில் எக்ஸ்குளூசிவ் என்ற பெயரில் கொரானா பாதிக்கப்பட்டவர்களிடம் பேட்டியும் எடுக்கிறார்கள். தயவுசெய்து வேண்டாம் எல்லாம் உங்களுக்கு தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இப்படித்தான் கூறிய மும்பை டெல்லி சென்னை பத்திரிகையாளர்களுக்கு கூட தோற்று ஏற்பட்டுவிட்டது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று உங்கள் நலனுக்காக எச்சரிக்கிறேன்.

தினமலர், செய்தியாளர் கதிரவன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!