விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவ இன
மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாழ்வாதாரமே கோவில் திருவிழா திருமண நிகழ்ச்சி. இது போன்ற இடங்களில் அவர்கள் தயாரிக்கும் ஊசி பாசி மணிகளை விற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து 144 தடை உத்தரவால் இவர்களால் வெளியே சென்று வியாபாரம் செய்ய இயலாத சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருவதை அறிந்த இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவல் நிலைத்தில் பணிபுரிய காவலர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுடைய சொந்த பணத்தில் இருந்து 750 ரூபாய் மதிப்புள்ள பலசரக்கு பொருட்களை அவர்களுக்கு வழங்கினார்.
நரிக்குறவ இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய காவல்துறையினர்
எழுதியவர்: mohan April 22, 2020, 8:29 am




You must be logged in to post a comment.