17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண் கண்ணாடி கடைகளை உடனடியாக திறக்க வேண்டும்!அல்லது அரசே அரசு கண் மருத்துவமனையில் கண்ணாடிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!முதல்வருக்கு ஆம்ஆத்மி வசீகரன் வேண்டுகோள்!

கண் கண்ணாடி கடைகளை உடனடியாக திறக்க வேண்டும்!அல்லது அரசே அரசு கண் மருத்துவமனையில் கண்ணாடிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!முதல்வருக்கு ஆம்ஆத்மி வசீகரன் வேண்டுகோள்!

எழுதியவர்: Askar April 21, 2020, 11:52 pm

கண் கண்ணாடி கடைகளை உடனடியாக திறக்க வேண்டும்!
அல்லது அரசே அரசு கண் மருத்துவமனையில் கண்ணாடிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!
முதல்வருக்கு ஆம்ஆத்மி வசீகரன் வேண்டுகோள்!

அத்தியாவிசய தேவைகளில் மருத்துவமனைகள், மருந்து கடைகள், மளிகை கடைகள், காய்கறி, மீன் மற்றும் கறி கடைகள் அடங்கும். இந்த வரிசையில் அரசு கண் மருத்துவமனைகளும் இயங்குகிறது.

இதில் கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடி உடனடியாக அணிய வேண்டும் என்று கண் மருத்தவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இவர்கள் உடனடியாக கண்ணாடி அணிய வேண்டும் இல்லையேல் கண்பார்வை குறைவு ஏற்படுவதுடன் கண் வலி, தலை வலி, கழுத்து வலி உண்டாகிறது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்ணாடி அணியாதலால் மேலும் கண் பாதிப்பிற்குள்ளாகிறது, இது கிட்னி வரை பாதிக்க கூடும் என்கிறார்கள்.

மருத்துவர்கள் பரிந்துறைத்தவுடன் கண்ணாடி அணிவது மிக அவசியமானதாகும் கண் நோயாளிகள் தவிர்க்க முடியாததாகும். மனிதனுக்கு கண் மிக முக்கியமானதாகும்
ஆகவே கண் நோயாளிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் கண் கண்ணாடி கடைகளை தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதிக்க வேண்டும் இல்லையேல் அரசே அரசு கண் மருத்துவமனைகளில் கண் கண்ணாடிகள் கண் நோயாளிகளுக்கு கிடைக்குபடி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


இங்கனம்,


S.A.N.வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆம்ஆத்மிகட்சி
தமிழ்நாடு.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!