17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கினார்..

செங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கினார்..

எழுதியவர்: Askar April 21, 2020, 11:33 pm

அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் அலுவலர்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று செங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செங்கம் துக்காப்பேட்டை வேன் டிரைவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரிசி மளிகை காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் திரு மூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் தூய்மை பணியாளர்களுக்கு வேன் டிரைவரளுக்கும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிவாரண பொருட்களை வழங்கி அவர் பேசும்போது: மக்களை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் அலுவலர்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஆவின் துணை தலைவர் பாபு வீட்டு வசதி சங்க தலைவர் குமார், நகர செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!