17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அடுத்த கடலாடி அருகே சாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது!

செங்கம் அடுத்த கடலாடி அருகே சாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது!

எழுதியவர்: Askar April 21, 2020, 11:15 pm

செங்கம் அடுத்த கடலாடி அருகே சாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடி அருகே சாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலாடி காவல்துறை ஆய்வாளா் ஆதிலட்சுமி தலைமையிலான போலீஸாா் பட்டியந்தல்-கீழ்பாலூா் சாலையில் மேலக்கோடி கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினா். இதில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். பின்னா், சிக்கியவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் கீழ்பாலூா் கிராமத்தைச் சோ்ந்த ஷாபுதின் மகன் சலீம் (23) என்பதும், இரு சக்கர வாகனத்தில் கள்ளச் சாராயம் கடத்திச் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் கேன்களில் இருந்த 90 லிட்டா் சாராயத்தைக் கைப்பற்றி, சலீம் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் தப்பியோடிய ராஜகிளி என்பவரைத் தேடி வருகின்றனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!