17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக 62 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக 62 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்.

எழுதியவர்: mohan April 21, 2020, 8:35 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் திருவாடானை சமத்துவபுரத்தில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.கொரோனா நோய்கிருமியால் 144 தடை உத்தரவு மத்திய மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டது. இந்த 144 தடை உத்தரவால் திருவாடானை சமத்துவபுரத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் மக்கள் பாதை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு உதவி செய்யப்பட்டது.அதனடிப்படையில் மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி உ.சகாயம் இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு என 62 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.நிவாரண பொருட்களுக்கு விவசாய தோழமை இயக்க நிர்வாகிகள் உதவினர்.இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை மாவட்ட நீதி திட்ட பொறுப்பாளர் சந்திரசேகர், திருவாடானை ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசிரியர் சரவணன் , துரை முருகன், மக்கள் பாதை தன்னார்வலர்கள் மதிவாணன், அருள்தாஸ், ராஜேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.இறுதியாக அந்த பகுதியின் மக்கள் தலைவர் மக்கள் பாதை வழிகாட்டி உ.சகாயம் , மக்கள் பாதை தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!