17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மோடியே நேரில் கொடுத்தாக நினைத்துக் கொள்ளுங்கள்.மோடி முகமூடி அணிந்து நிவாரண உதவிகள் வழங்கிய பா.ஜ பிரமுகர்.

மோடியே நேரில் கொடுத்தாக நினைத்துக் கொள்ளுங்கள்.மோடி முகமூடி அணிந்து நிவாரண உதவிகள் வழங்கிய பா.ஜ பிரமுகர்.

எழுதியவர்: mohan April 21, 2020, 8:30 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் மரு.விஜயபாண்டியன்.இவர் பா.ஜ சார்பில் மாவட்ட மருத்துவரணிச் செயலாளராகவும் உள்ளார்.ஊரடங்கால் வேலையிழந்து கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வசதி இல்லாதவர்களை அடையாளம் கண்டு சுமார் 500 பேரை தன் அலுவலகத்திற்கு அழைத்து அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட வீட்டுச்சாமான்கள் அடங்கிய பை தொகுப்பை வழங்கினார்.

வழங்கும் போது பிரதமர் மோடியின் ஞாபகம் மக்கள் மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காக மோடி முகமூடியணிந்து பிரதமர் மோடியே உங்களுக்கு நேரில் வந்து கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிக் கொண்டே நிவாரண உதவிகள் வழங்கினார்.பொது மக்களும் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து பொருள்களை வாங்கிச் சென்றனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கும் அனைவரும் தன்னை முன்னிலைப்படுத்தும் இக்காலத்தில் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கியது பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது.மேலும் சமத்துவபுரத்தில் உள்ள நரிக்குறவகுடும்பங்கள் 50 பேருக்கும் உதவினார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!