17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கொரோனாவால் வேலையிழந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக பிரமுகர் உதவிகள் வழங்கினார்.

உசிலம்பட்டி அருகே கொரோனாவால் வேலையிழந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக பிரமுகர் உதவிகள் வழங்கினார்.

எழுதியவர்: mohan April 21, 2020, 8:24 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் உணவின்றி தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பிலும் தன்னார்வர்லர்களும் உணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் வேலை இழந்து தவிக்கின்ற சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கும் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன் அரிசி காய்கறி அடங்கிய பை தொகுப்பை வழங்கினார்.

மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்.கூட்டம் கூடுவவதைத் தடுக்க ஒவ்வொரு வீடடாகச் சென்று பொருள்களை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜா ஒன்றியக்கவுன்சிலர் சத்தியசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்கிச் சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!