17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் இருப்பு வைக்க லாரியில் ஏற்றி வந்தபோது கடத்த முயற்சி: 959 மதுபாட்டில்கள் பறிமுதல் 5 பேர் கைது

ராமநாதபுரத்தில் இருப்பு வைக்க லாரியில் ஏற்றி வந்தபோது கடத்த முயற்சி: 959 மதுபாட்டில்கள் பறிமுதல் 5 பேர் கைது

எழுதியவர்: mohan April 21, 2020, 6:53 pm

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., பாண்டி தலைமையில் போலீசார்  அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, தேவிபட்டினத்தில் இருந்து இராமேஸ்வரம் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 10 அட்டை பெட்டிகளில் 479 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், ஆர்.எஸ்.மங்கலம் டாஸ்மாக் கடையில் இருந்த மது பாட்டில்களை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருப்பு வைக்க ஏற்றி வந்த லாரியை, இடைமறித்து மது பாட்டில்களை திருக்குமரனுக்குச் சொந்தமான சரக்கு வாகனத்தில் சட்ட விரோதமாக கடத்தியது தெரிந்தது. ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் சந்திப்பு அம்மா பூங்கா சந்திப்பில், கேணிக்கரை சிறப்பு எஸ்.ஐ., முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி-பிளாக் சாலையில் இருந்து அம்மா பூங்கா நோக்கிச் சென்ற சரக்கு லாரியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, தேவிபட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 48 வீதம் 10 அட்டை பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், ஆர்.எஸ்.மங்கலம் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை ராமநாதபுரம் ஏற்றி வந்தபோது, தப்பிச் சென்ற குற்றவாளிகளுடன் திருடி கடத்தி வந்தது தெரிந்தது.இவ்விரு சம்பவத்திலும் ராமநாதபுரம் அருகே காருகுடி வாழமூர்த்தி 46, ஆர்.எஸ்.மங்கலம் அருகே மருதூரைச் சேர்ந்த ராஜகுரு 43, (டாஸ்மாக் மேற்பார்வையாளர்), செங்கமடை கோவிந்த ராஜ் 31, ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசை மனோகரன் மகன் மணிகண்டன் 27, குளத்தூர் காளிமுத்து மகன் வினோத் 27, உச்சிப்புளி அருகே வட்டான்வலசை திருக்குமரன் 35 ஆகியோரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1.15 லட்சம் மதிப்பில் 959 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!