18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் சமூக வலைதளங்களில் கொரோனோ என்று வதந்‘தீ’யை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க SDPI கட்சி வலியுறுத்தல்.. பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம்… வீடியோ..

கீழக்கரையில் சமூக வலைதளங்களில் கொரோனோ என்று வதந்‘தீ’யை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க SDPI கட்சி வலியுறுத்தல்.. பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம்… வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் April 21, 2020, 6:05 pm

கீழக்கரையில் சமீபத்தில் முதியவர் இறந்து பின்பு கொரோனோ உறுதி செய்யப்பட்ட நிலையில் 200கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டு இராமநாதபுரம் ஆட்சியரால் 232நபர்களுக்கும் கொரொனோ தொற்று இல்லை என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால் அறிக்கை வரும் முன்மே சில சமூக விரோதிகள் சரவணன் என்பவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் அவரும், அவர் பணிபுரிந்த நிறுவனத்தாரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி,  கொரனா வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக சொல்லியுள்ளார்கள்.கீழக்கரை மக்கள் எதிர்பார்ப்பை காவல்துறை உண்மைப்படுத்துவார்கள் என காத்திருப்போம். இதுபோன்ற வதந்தி குறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என கீழக்கரை நகர் SDPI தலைவர் முகம்மது பைசல் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!