17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவு வரை அம்மா உணவகத்தை இயக்க முடிவு.

உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவு வரை அம்மா உணவகத்தை இயக்க முடிவு.

எழுதியவர்: mohan April 21, 2020, 4:50 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் உணவின்றி தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.இதனால் ஊரடங்கால் வேலை இழந்துள்ளவர்கள் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வாங்கி அருந்தி பயன் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் காலை இட்லி மதியம் தயிர்சாதம் சாம்பார் சாதம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் காலை 9 மணிக்குள் 1200 இட்லிகளும் மதியம் 3 மணிக்குள் 500 சாம்பார்சாதம் தயிர்சாதம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ;.இந்நிலையில் ஊரடங்கு மே3 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால் அம்மா உணவகத்தில் சாப்பாடு முடிந்தபின்னும் ஆட்கள் வருவதால் நேரத்தை அதிகப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு சுத்தம் பொருள்களின் தரம் கடைபிடிக்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.பின்னர் பொதுமக்களின் வசதிக்காக காலை இட்லி வடை பொங்கலும் மதியம் சாம்பார் சாதம் வெஜிடபிள் பிரியாணி தயிர் சாதமும் இரவு சப்பாத்தி இட்லியும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும் அம்மா உணவகம் பொதுமக்களின் வசதிக்காக இரவு 8 மணி வரை செயல்படும் எனவும் தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!