17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

எழுதியவர்: mohan April 21, 2020, 4:43 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்துப் பஞ்சாயத்துத்தலைவராக உள்ள அலெக்ஸ் பாண்டியின் மேற்ப்பார்வையில் வத்தலக்குண்டு சாலையிலுள்ள மெய்யணம்பட்டி கிராமத்தின் சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதனை உசிலம்பட்டி காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். வத்தலக்குண்டு சாலையில் பொது மக்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும் பொதுமக்களிடம் வெளியில் சுற்றினால் கொரோனா தொற்றிக் கொள்ளும் என்ற விழிப்புணர்வு இந்த ஓவியத்தைப் பார்த்த பின்பாவது வரும் என்பதால் வத்தலக்குண்டு சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!