இராமநாதபுரம் எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் சமூகத்தவருக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று வழங்கினார்.கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் இந்தியன் ரெட் கிராஸ் தமிழ்நாடு கிளை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்
அரிசி 5 கிலோ , பருப்பு 1 கிலோ, சீனி 1 கிலோ, எண்ணெய் அரை லிட்டர் பாக்கெட், மசாலா பொடி 100 கிராம், சலவைத்தூள் அரை கிலோ பாக்கெட், ஹார்லிக்ஸ் 50 கிராம், பூஸ்ட் 50 கிராம்நாப்கின் 1 பாக்கெட் ஆகிய பொருட்கள் அடங்கிய 100 பை வழங்கப்பட்டது.இராமநாதபுரம் எம்ஜிஆர் நகர் பொதுமக்களுக்கு இப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வழங்கினார். ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, ரெட் கிராஸ் சேர்மன் எஸ்.ஹாருன், தாசில்தார் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஜபார் , ஜூனியர் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட கன்வீனர் எம்.ரமேஷ், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெட் கிராஸ் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் செய்தார்.
இராமநாதபுரம் நரிக்குறவர் சமூகத்தவருக்கு ரெட் கிராஸ் சார்பில் ஆட்சியர் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்
எழுதியவர்: mohan April 21, 2020, 4:38 pm




You must be logged in to post a comment.