17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் உட்கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பிரிவு காவலர்களுக்கும் 10 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் உட்கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து பிரிவு காவலர்களுக்கும் 10 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 21, 2020, 4:05 pm

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் இரவு பகலாக சட்ட ஒழுங்கை பேணி காக்கும் வகையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் உட்கோட்டத்தில் பணிபுரியும் 450 க்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு காவலர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சானிடைஸர், முககவசம், கையுறை,மஞ்சள் பொடி, பிஸ்கட், பழவகைகள் மற்றும் இளநீர் உள்ளிட்ட 10 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பை காவலர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!