விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் நடுவகுளம் கண்மாய் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோப்பு ஒன்றில் கள்ளச் சாராயம் தயார் செய்வதாக திருவில்லிபுத்தூர் மதுவிலக்கு டிஎஸ்பி ஸ்டீபனுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பானுமதி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் சேத்தூர் நடுவகுளம் கண்மாய் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது சிலர் கள்ளச்சாராய ஊறல் போட்டு சாராயம் காட்சி கொண்டிருந்தனர்.
மதுவிலக்கு போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பேரை பிடித்த மதுவிலக்கு போலீசார் அவர்களை திருவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர் விசாரணையில் அவர்கள் சேத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் வயது 42 மற்றும் பேச்சிமுத்து வயது 50 என தெரியவந்தது
மேலும் தப்பி ஓடியவர்கள் சகாதேவன் மற்றும் கஜேந்திரன் என்பது மதுவிலக்கு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் ஆறுமுகத்தையும் பேச்சி முத்தையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சகாதேவன் மற்றும் கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்
ஆறுமுகமும் பேச்சி முத்துவும் வைத்திருந்த 150 லிட்டர் சாராய ஊழலையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் அய்யனார் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சாராய ஊறல் தயாரித்து கொண்டிருந்த ராமர் வயது 50 செல்லத்துரை வயசு 34 ஆகிய இருவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர்கள் வைத்திருந்த 110 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து இவர்கள் இருவரையும் கைது செய்தனர்
இவர்களிடம் இருந்து 30 லிட்டர் கள்ளச் சாராயமும் பறிமுதல் செய்தியாளர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்









You must be logged in to post a comment.