தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையில் தொடர்ந்து 17 நாட்களாக கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள், முதியோர்,
மாற்றுத்திறனாளிகள், பசியிலிருப்போர்களுக்கு தினமும் சுமார் 200 நபர்களுக்கு மதிய உணவு உணவு மற்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கப சுரக் குடிநீர், பழங்குடி குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் ஆகியவற்றை சாம்பவர் வடகரை அஷோகா ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான தன்னார்வலர் பொது அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சாம்பவர் வடகரை பகுதிக்கு வருகை தந்த கடையநல்லூர் எம்எல்ஏ முகம்மது அபுபக்கர் தொண்டு நிறுவனத்தாரையும்,அதன் பணிகளையும் பாராட்டி பயனாளிகளுக்கு உணவு வழங்கினார்.இந்நிழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் ஆ.இரவிசங்கர், சாம்பவர் வடகரை திமுக இளைஞரணி முத்து, முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன், தொண்டு நிறுவனர் உ.பாண்டித்துரை, மேலாண்மை அறங்காவலர் ஜோதி இராமகிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளர்கள் சேது இராமன் தன்னார்வலர் முத்து, ஜான், செல்வகுமார், கபில்ராஜ், கவிஅரசன்,பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.