17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கழுநீர்குளத்தில் கார் மோதி கோர விபத்து- விவசாய வேலைக்கு நடந்து சென்ற 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..

கழுநீர்குளத்தில் கார் மோதி கோர விபத்து- விவசாய வேலைக்கு நடந்து சென்ற 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..

எழுதியவர்: mohan April 21, 2020, 1:51 pm

விவசாய வேலைக்காக சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக பின்னால் வந்த கார் மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் மூன்று பேர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கழூநீர்குளத்தை சேர்ந்தவர்கள் முத்தையா மகன் மாடசாமி (59) மருதையா தேவர் மனைவி துரைச்சி (55) முத்துப்பாண்டி தேவர் மனைவி பொன்னம்மாள் (60) ஆகியோர் இன்று ( 21.04.2020 ) காலை 7 .30 மணிக்கு விவசாய பணிகளுக்காக வீகே புதூர் நோக்கி ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் முக்கூடலிலிருந்து அகரகட்டு நோக்கி வேகமாக  சென்று கொண்டிருந்த கார் பலமாக மோதியது.இதில் சாலையில் நடந்து சென்றவர்கள் 3 பேரூம் அந்தரத்தில் பறந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

காரை ஓட்டிவந்த அகரகட்டை சேர்ந்த அந்தோணி சவரிமுத்து மகன் ஜோன்ஸ் அந்தோணி என்பவர் காயமடைந்தார் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாஹீர் ஹீசைன், சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார் விரைந்து சென்று பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓரே ஊரை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவத்தையடுத்து திரளான மக்கள் கூடி கதறி அழுத காட்சி இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,வாகனங்களை மிக வேகமாக இயக்கப்படுவதால் நிலைதடுமாறி இது போன்ற கோர விபத்து நிகழ்கிறது. வாகனங்களின் அதிவேகம் கட்டுப்படுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!