17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் கார்ப்பரேட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகரில் கார்ப்பரேட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

எழுதியவர்: mohan April 21, 2020, 1:34 pm

விருதுநகர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கண்காணிப்பு குழுவினர் மருந்து பொருட்கள், மாஸ்க்,உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்படுகின்றனவா என்பது குறித்தும்அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையில் , 5 பேர் கொண்ட குழு விருதுநகர் ஊரக மற்றும் நகர் பகுதிகளில் பேக்கரி, ஹோட்டல், மருந்துக்கடை, பழக்கடைகளில்திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விருதுநகர் சத்திய மூர்த்தி சாலையில் பழக்கடை ஒன்றில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதனையடுத்து அக்கடையில் இருந்த 150 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல்அக் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!