17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

நிலக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர்: mohan April 21, 2020, 1:24 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் கிராமத்தை சேர்ந்த ராமன்  40, ராஜன் செல்லப்பா 27,  நாகரத்தினம்  25 , லோகநாதன்.  19 ஆகிய 4 பேர்களும் அனைப்பட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மணல் அள்ளி வந்ததாக கூறப்படுகிறது.     அப்போது  விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாட்டு வண்டியை கைப்பற்றி விளாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து ராமன், லோகநாதன் , சொல்லப்பா, நாகரத்தினம் ஆகிய 4 பேர்களையும் லத்தியால் உடலில் பல்வேறு இடங்களில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.       இதில் பலத்த காயமடைந்த 4 பேர்களும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மாட்டுவண்டியை கைப்பற்றி வழக்குகள் பதிவு செய்திருந்தால் பரவாயில்லை இப்படி காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய  சம்பவத்தை  வன்மையாக இந்த பகுதி மக்கள் கண்டித்து போராட்டம் நடத்துவதாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!