17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்திரங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக சார்பில் அரிசி, காய்கறிகள் , நிதியுதவி வழங்கப்பட்டது.

உத்திரங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக சார்பில் அரிசி, காய்கறிகள் , நிதியுதவி வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan April 21, 2020, 1:16 pm

தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி 5 கிலோ காய்கறிகள், முகக் கவசம், கிருமிநாசினி மற்றும் நிதி உதவி திமுக சார்பாக வழங்கப்பட்டது.மேலும் உத்திரங்குடி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி சிறக்க வாழ்த்தி. கெளரவித்தது மரியாதை செலுத்தப்பட்டது.

அதேபோல் அரசு நியாயவிலைக் கடை ஊழியர் களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது ஏ.ஆர் சித்திக் தலைமையில், திமுக ஒன்றிய கழக செயலாளர் அப்துல்மாலிக், உத்திரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேஷாக் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஷகிலா அஜிஸ், முன்னிலையில் உத்திரங்குடி ஊராட்சி, சங்கரன்பந்தலில் பணிபுரியும் அத்தனை அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உத்திங்குடி ஊராட்சி திமுக கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!