17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த செலவில் ரூ 1000 நிதி உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த செலவில் ரூ 1000 நிதி உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவி

எழுதியவர்: mohan April 21, 2020, 1:05 pm

கொரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் சிறு குறு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய நடுத்தர மக்கள் உட்பட அனைவர்க்கும் நிதி உதவி உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான பொருட்களை அளித்து வருகிறது.மேலும் சமூக ஆர்வலர்களும் தன்னார்வ தொண்டர்களும் சமூக சேவையாற்றி வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முன்னோடி கிராமமாக திகழும் கார்சேரி கிராமத்தில் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் K.R.சீனிவாசன் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, தற்போதைய ஊராட்சி மன்ற தலைவி பாண்டீஸ்வரி இளவரசன் ஆகியோர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பழைய துணிமணிகள் வாங்கி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலாளர்களுக்கு தலா ரூ 1000 வீதம் நிதி உதவி வழங்கினர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு முன் உதாரணமாக முதன் முறையாக ஊராட்சி மன்ற தலைவி சொந்த முயற்சியில் கிராம மக்களுக்கு சேவையாற்றி வருவது பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.மேலும் கார் சேரி ஊராட்சி மன்ற தலைவி பாண்டீஸ்வரி இளவரசன் கிராமத்தில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!