17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சுமார் 65 நரிக்குறவர் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் மதிப்பில் அரிசி , காய்கறி பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சுமார் 65 நரிக்குறவர் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் மதிப்பில் அரிசி , காய்கறி பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்.

எழுதியவர்: mohan April 21, 2020, 12:29 pm

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா உட்பட தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வெளியில் பொதுமக்கள் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பினரும் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை பகுதியில் வசிக்கும் சுமார் 65 நரிக்குறவர் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் மதிப்பில் அரிசி மற்றும் காய்கறி பொருட்களை வாகனம் மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் நேரில் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!