17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக நீதிமன்ற பணிகளை மே மாதத்தில் தொடங்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வழக்கறிஞர் கூட்டமைப்பு

தமிழக நீதிமன்ற பணிகளை மே மாதத்தில் தொடங்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வழக்கறிஞர் கூட்டமைப்பு

எழுதியவர்: mohan April 21, 2020, 11:49 am

தமிழக நீதிமன்ற பணிகளை மே மாதத்தில் தொடங்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பதிவாளருக்கும் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தற்பொழுது கொரானா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் நீதிமன்றப் பணிகள் முடக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கையின் படி கோடைகால விடுமுறை தள்ளி வைக்கப்படுவதாகவும், மே மாதம் முதல் வாரத்தில் தமிழக நீதிமன்றங்களில் பணி தொடங்கும் என தெரிவித்துள்ளார். தற்போது கொரானா வைரஸ் தொற்று காற்றைவிட வேகமாக பரவி வருகிறது.அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மே மாதத்தில் தமிழகத்தில் நீதிமன்றப் பணிகளை தொடங்கினால், பெருமளவில் நீதிமன்றங்களில் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. அவ்வாறு மக்கள் கூட்டம் கூடும்போது யாராவது கொரானா தொற்று உள்ள ஒருவர் நீதிமன்றத்திற்கு வந்தால், அவர் மூலம் பல நூறு பேருக்கு பரவ வாய்ப்பு உள்ளது. இது ஒரு சமூக தொற்றாக வைரஸ் மூன்றாவது நிலையாக கொத்துக்கொத்தாக பரவுவதற்கு வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும். ஆகையினால் மே 31 வரை நீதிமன்ற பணிகளை முடக்கி அவசர வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க உரிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரா.யோகுதாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!