18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டுகாய்கறிப் பொருள்களை ஊராட்சி மன்றத்தலைவர் வழங்கினார்.

உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான வீட்டுகாய்கறிப் பொருள்களை ஊராட்சி மன்றத்தலைவர் வழங்கினார்.

எழுதியவர்: mohan April 20, 2020, 7:35 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் உணவின்றி தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பிலும் தன்னார்வர்லர்களும் உணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவில் திறம்பட பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டு ஊக்குவிக்கும் விதமாக வடுகட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வதனா தனிக்கொடி தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் அந்த பகுதி மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுடன் முககவசம் அணிவது, கை கழுவது போன்றவைகளை விளக்கினார். சுமார் 30 தூய்மைப்பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!