வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மதுரை மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.வினய். அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.அப்போது மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் பங்களிப்பாக 500 முக கவசங்கள் மற்றும் 250 குடிநீர் குடுவைகளை ஆட்சியரிடம் வழங்கினார்.இதனை காவல்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.மேலும் இத்தகைய சூழலில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு தெரிவித்தார்.வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து அறக்கட்டளையின் நற்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் அசோக்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.இவர் ஊரடங்குக்கு முன்னதாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய் குறித்து தனி நபர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் ஊரடங்கு காலத்தில் பல்வேறு முதியோர் இல்லங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் உட்பட பல்வேறு உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.