17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி-தாசில்தார் முன்னிலையில் வழங்கல்..

சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி-தாசில்தார் முன்னிலையில் வழங்கல்..

எழுதியவர்: Askar April 20, 2020, 6:24 pm

சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி-தாசில்தார் முன்னிலையில் வழங்கல்..

சுரண்டை அருகே உள்ள குறிச்சான் பட்டியில், தொடரும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட , எளியவர்களுக்கும், முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் வழங்கினார்.

ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சீனி, ரவை, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள், காய்கறிகள், முகக் கவசங்கள் அடங்கிய தொகுப்பினை 200 குடும்பங்களுக்கு வழங்க அரசு ஒப்பந்ததாரர்  கரையாளனூர் சண்முகவேலு ஏற்பாடு செய்திருந்தார். நீதிமன்ற வழிகாட்டலின் படி வீரகேரளம்புதூர் தாசில்தார் மூலமாக இவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் மண்டல துணை தாசில்தார் சிவன் பெருமாள், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், கிராம உதவியாளர் ஜமுனாராணி ஆகியோர் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினர். மேலும் அரசு உத்தரவுப்படி வெளியில் வராமல் வீட்டில் தனித்திருக்கவும், வெளியில் வரும் பட்சத்தில் முக கவசம் அணிந்து வரவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும் பொதுமக்களுக்கு அவர்கள் அறிவுரை வழங்கினர்.

மேலும் சுரண்டை நல்ல சமாரியன் கிளப் சார்பில் சென்னை டேனியல் ராஜம்மாள் அறக்கட்டளை உதவியுடன், தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட அதிசயபுரம் மற்றும் காமராஜ் நகர் ஆகிய கிராமங்களில்,  6வது கட்டமாக வீகேபுதூர் தாசில்தார் ஹரிஹரன் அனுமதியுடன் அதிசயபுரம் சேகர குரு ஜெபமணி‌, உதவி குரு மனோஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான்  ஆகியோர் சுமார் 50 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள், முககவசம் போன்ற வீட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!