17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிகாரிகள் முன்னிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து, பயிறு விவசாயிகளிடமிருந்து மறைமுக ஏலம் வியாபாரிகள் கொள்முதல்

அதிகாரிகள் முன்னிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து, பயிறு விவசாயிகளிடமிருந்து மறைமுக ஏலம் வியாபாரிகள் கொள்முதல்

எழுதியவர்: mohan April 20, 2020, 7:08 pm

செம்பானார்கோவிலில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் இயங்கி வருகிறது. இதில் ஆண்டுதோறும் பருத்தி சீசனில் விவசாயிகளிடமிருந்து பருத்தி ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் நலன்கருதி தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைகூடங்கள் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்து உளுந்து, பயிறு வகைகளை விற்பனை செய்வதற்கு அறிவுரறுத்தியது.

அதனையடுத்து செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் உளுந்து, பயிறு மறைமுக ஏல விற்பனை, நாகை மாவட்ட விற்பணைக்குழு செயலாளர் வித்யா முன்னிலையில் ஏல விற்பனை நடந்தது. இதில் தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒழுங்குமுறை விற்பனைகூடத்தால் அங்கிகரிக்கப்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். தற்போது நடந்த ஏல விற்பனையில் பயிறு 160 குவிண்டாலும், உளுந்து ஒரு குவிண்டாலும் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஏலமுறையில் கொள்முதல் செய்தனர். பயிறு ஒரு குவிண்டால் ரூபாய் 7,200 முதல் 7,869 ரூபாய் வரையிலும், உளுந்து ரூபாய் 8400-க்கும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். செம்பனார்கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து விவசாயிகள் இதில் கலந்துகொண்டு தங்களது விளைபொருட்களை விற்பனை செய்தனர்.

இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!