17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரமலான் நோன்பு கஞ்சி காய்ச்ச அரசு வழங்கும் அரிசியை திருப்பி வழங்கிய ஐக்கிய ஜமாத் முடிவு

ரமலான் நோன்பு கஞ்சி காய்ச்ச அரசு வழங்கும் அரிசியை திருப்பி வழங்கிய ஐக்கிய ஜமாத் முடிவு

எழுதியவர்: mohan April 20, 2020, 6:11 pm

இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத்கள மாவட்ட தலைவர் எம்.எஸ்.ஏ ஷாஜஹான், மாவட்ட பொதுச்செயலர் ஏ. ஜெய்னுல்ஆலம்,மாவட்ட பொருளாளர் ம.இ. அ.மு.அப்துல் நாஃபிஉ ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவை சந்தித்து மனு அளித்தனர்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்ச சலுகை விலையில் பச்சரிசி வழங்குவது போல இந்த ஆண்டும் வழங்க உத்தரவிட்டது.வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நோன்பு கஞ்சி அரிசியை ஜமாத் நிர்வாகிகள் பெற்று அந்தந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளுக்கு விநியோகிப்பதன் மூலம் நோன்பு கஞ்சி காய்ச்ச இயலாது. நோன்பு கஞ்சி காய்ச்ச அரிசி மட்டுமின்றி பல்வேறு மளிகை பொருட்கள் தேவைப்படும். அரிசியை மட்டும் வீடுகளுக்கு வழங்குவதால் நோன்பு கஞ்சி காய்ச்ச இயலாது என் மக்கள் கூறுகின்றனர். இந்த அரிசியை ஜமாத்தாருக்கு விநியோகம் செய்வதில் நிர்வாகிகளுக்கு ஏற்படும் சிரமங்கள், பிரச்னைகள், சமூக இடைவெளி பின்பற்ற முடியாத சூழல் காரணத்தால் இந்தாண்டு நோன்பு கஞ்சி காய்ச்ச வழங்கும் அரிசியை அரசிடமிருந்து பெற இயலாத நிலையில் ஏற்பட்டுள்ளது.நோன்பு கஞ்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள 417.715 டன் பச்சரிசியை, தேசிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தமிழக அரசை அனைத்து முஸ்லிம் ஜமாத்துகள் சார்பில் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் கேட்டுக்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத்கள மாவட்ட தலைவர் எம்.எஸ்.ஏ ஷாஜஹான், மாவட்ட பொதுச்செயலர் ஏ. ஜெய்னுல்ஆலம்,மாவட்ட பொருளாளர் ம.இ. அ.மு.அப்துல் நாஃபிஉ ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவை சந்தித்து மனு அளித்தனர்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்ச சலுகை விலையில் பச்சரிசி வழங்குவது போல இந்த ஆண்டும் வழங்க உத்தரவிட்டது.வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நோன்பு கஞ்சி அரிசியை ஜமாத் நிர்வாகிகள் பெற்று அந்தந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீடுகளுக்கு விநியோகிப்பதன் மூலம் நோன்பு கஞ்சி காய்ச்ச இயலாது. நோன்பு கஞ்சி காய்ச்ச அரிசி மட்டுமின்றி பல்வேறு மளிகை பொருட்கள் தேவைப்படும். அரிசியை மட்டும் வீடுகளுக்கு வழங்குவதால் நோன்பு கஞ்சி காய்ச்ச இயலாது என் மக்கள் கூறுகின்றனர். இந்த அரிசியை ஜமாத்தாருக்கு விநியோகம் செய்வதில் நிர்வாகிகளுக்கு ஏற்படும் சிரமங்கள், பிரச்னைகள், சமூக இடைவெளி பின்பற்ற முடியாத சூழல் காரணத்தால் இந்தாண்டு நோன்பு கஞ்சி காய்ச்ச வழங்கும் அரிசியை அரசிடமிருந்து பெற இயலாத நிலையில் ஏற்பட்டுள்ளது.நோன்பு கஞ்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள 417.715 டன் பச்சரிசியை, தேசிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தமிழக அரசை அனைத்து முஸ்லிம் ஜமாத்துகள் சார்பில் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் கேட்டுக்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!