17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சாம்பவர் வடகரை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் நிவாரண உதவி வழங்கி ஆலோசனை…

சாம்பவர் வடகரை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் நிவாரண உதவி வழங்கி ஆலோசனை…

எழுதியவர்: Askar April 20, 2020, 5:24 pm

சாம்பவர் வடகரை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் நிவாரண உதவி வழங்கி ஆலோசனை…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை பேரூராட்சியில் நகர திமுக இளைஞரணி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், எளியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கடையநல்லூர் எம்எல்ஏ முகமது அபுபக்கர் கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கி தூய்மை பணியாளர்களிடம் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து கேட்டறிந்து சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.

இதில்,சாம்பவர் வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் ரவிசங்கர்,  முகமதுகடாபி, இளைஞரணி முத்து, முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன், மர்காஷிஸ், பட்டுமுத்து, ரசூல், பாலராஜ், அருணா, பலவேசம், ஆறுமுகம், கார்த்திக், ராஜா, ஜோதி, ஜாண், கபில், மாணிக்கம், செல்வம், பால்ராஜ், இசக்கிதுரை, சுப்புராஜ், பிச்சையா, தங்கமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கைகழுவதின் அவசியம் குறித்தும்,கொரோனாவை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!