18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீர வணக்கம் செய்து அடக்கம் செய்ய வேண்டியவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர்; புரிதலும், விழிப்புணர்வும் இல்லாத சுயநலம் கொண்ட கல்நெஞ்சம் படைத்த மக்கள்:-மூத்த பத்திரிகையாளர் “ஜெய்” வேதனை..

வீர வணக்கம் செய்து அடக்கம் செய்ய வேண்டியவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர்; புரிதலும், விழிப்புணர்வும் இல்லாத சுயநலம் கொண்ட கல்நெஞ்சம் படைத்த மக்கள்:-மூத்த பத்திரிகையாளர் “ஜெய்” வேதனை..

எழுதியவர்: Askar April 20, 2020, 4:41 pm

புரிதலும், விழிப்புணர்வும் இல்லாத சுயநலம் கொண்ட கல்நெஞ்சம் படைத்த மக்கள்!

கொரோனாவில் இருந்து மக்களை காக்க 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்திய பின்னும் காய்கறி சந்தையிலும், மல்லிகை கடையிலும், இறைச்சி கடைகளில் குவியும் மக்கள்…. மக்களுக்காக மக்கள் உயிரைக் காக்க போராடி நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர் சுயநலம் கொண்ட கல்நெஞ்சம் படைத்த மக்கள். இது மக்களுக்கு கொரோனா குறித்த புரிதலும், விழிப்புணர்வும் இல்லாததை காட்டுகின்றது. தொற்றுநோய் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து விட்டாலோ அல்லது தகனம் செய்து விட்டாலோ அந்த உடலிலிருந்து பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று அரசு தெளிவாக அறிவித்த பின்னும் மனிதாபிமானம் என்ன விலை என்று கேட்கும் சென்னைவாசிகள் மீண்டும் ஒரு கொடூரமான செயலை அரங்கேற்றியுள்ளனர். வீர வணக்கம் செய்து அடக்கம் செய்ய வேண்டியவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

-ஜெய் பத்திரிக்கையாளர், கோவை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!