கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக கபசுரக் குடிநீர் வடக்குத்தெரு பகுதி முழுவதும் வீடு வீடாக வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் ஆனது திப்பிலி, கிராம்பு சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகார வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி இலை, கோஷ்டம், சீத்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு ஆகிய 15 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி இந்த கபசுரக் குடிநீர் ஆனது கொரோனா வைரஸின் அதீத நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட கூடியதாகும்.
இந்த கபசுரக் குடிநீர் வடக்குத்தெரு பகுதியில் மூன்றாம் கட்டமாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.




You must be logged in to post a comment.