17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மதுரை கூடல்நகர் பகுதியில் தன் உயிரை பணயம் வைத்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவன்

மதுரை கூடல்நகர் பகுதியில் தன் உயிரை பணயம் வைத்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவன்

எழுதியவர்: mohan April 20, 2020, 12:54 pm

மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வயதான புல்லி குட்டான் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றினை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். பெண் நாயாக இருப்பதனால் குடும்பத்தினரிடம் அதிக அளவு பாசத்துடன் இருந்து வளர்ந்து வந்துள்ளது. யாரையும் அவ்வளவு எளிதில் வீட்டில் நுழைய விடாமல் காவல் காப்பதிலும் படு கில்லாடியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  குடும்பத்தினர் வீட்டில் தங்கள் தங்களுடைய வேலையில் மூழ்கி இருந்த சூழ்நிலையில் தாரா என்ற பெயர் கொண்ட அந்த நாய் வழக்கத்துக்கு மாறான சத்தத்துடன் பயங்கரமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது.

காம்பவுண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது. இதை பார்த்த குடும்பத்தினர் வெளியே வருவதள்குள் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் செட் பகுதிக்குள் சென்றது அந்த நாய். குடும்பத்தை கார் அருகில் நாய் நெருங்க விடவில்லை. குடும்பத்தினர் பார்த்த போது கண்ணாடிவிரியன் பாம்பு படம் எடுத்தபடி நின்றுகொண்டிருந்தது நாய் தாரா உடனடியாக கட்டுவிரியன் பாம்பை கடித்து குதற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் பாம்பிடம் இருந்து நாயினை காப்பாற்ற முயன்று சண்டையை தடுத்து விட முயன்றனர் .ஆனால் தாரா இறுதிவரை குடும்பத்தினரை நெருங்கவிடாமல் சண்டையை தொடர்ந்து போட்டது. இதில் கட்டுவிரியன் பாம்பு நாயின் முகத்தில் ஆக்ரோஷமாக கொத்தி விஷத்தை செலுத்தியது. மேலும் நாய் கடித்ததில் பாம்பு அந்த இடத்திலேயே இறந்து விட்டது. இதனைத்தொடர்ந்து சில நிமிடங்களில் நாய் தாரா மயக்க நிலைக்கு சென்றது. இதனால் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவர் டாக்டர் மெரில்ராஜ்  தொடர்புகொண்டு நேரில் சென்று விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு நாய் தீவிர காண்காணிப்பில் உள்ளது.தன் உயிரை பணயம் வைத்து எஜமானன் குடும்பத்தை காப்பாற்றிய நன்றியுள்ள ஜீவனை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.மேலும் நாய் விரைவில் குணமடைந்து வர ஆண்டவனை மனமுருக வேண்டிக் கொண்டனா்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!