17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், ஏழை சமூக மக்கள் என 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜய் வழங்கினாா்..

செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், ஏழை சமூக மக்கள் என 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜய் வழங்கினாா்..

எழுதியவர்: Askar April 20, 2020, 12:37 pm

செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், ஏழை சமூக மக்கள் என 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜய் வழங்கினாா்..

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், ஏழை சமூக மக்கள் என 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் விஜய் வழங்கினாா்

கரோனா வைரஸ் தெற்று பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலா் வெளியில் செல்ல முடியாமல் அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் தவித்து வந்தனா்.

இதை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் விஜய் மேல் பெண்ணாத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கிராமத்தில் 100 கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் மற்றும் ஏழை சமூக குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறித் தொகுப்பை வழங்கினாா்.

மேலும், மேல் பெண்ணாத்தூர் கரியாபட்டு, பூங்க்குட்டை காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் உதவிக்காக எப்போது வேண்டுமானாலும் தலைவரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், திமுக முக்கிய நிர்வாகி ஆர்கே செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!