18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் அதிரடி! தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி செயல் அலுவலா் பறிமுதல் செய்து நடவடிக்கை..

செங்கத்தில் அதிரடி! தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி செயல் அலுவலா் பறிமுதல் செய்து நடவடிக்கை..

எழுதியவர்: Askar April 20, 2020, 9:37 am

செங்கத்தில் அதிரடி! தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி செயல் அலுவலா் பறிமுதல் செய்து நடவடிக்கை..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பேரூராட்சி செயல் அலுவலா் திருமூர்த்தி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாா்.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பால், மளிகை, மருந்துக் கடைகளுக்கு மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர திறக்கப்படும் மற்ற கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்த நிலையில், செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் திருமூா்த்திக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் பணியாளா்கள் அந்தக் கடைக்குச் சென்று கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!