டாஸ்மாக் மூடல்! கள்ளச்சாராயம் கடத்தல் அதிகரிப்பு:செங்கம் அடுத்த தானிப்பாடி பகுதியில் 420 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திவந்த 6 பேர் கைது..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி பகுதியில் சாராயம் கடத்தியதாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தண்டராம்பட்டு காவல்துறை ஆய்வாளர் பாரதி, தானிப்பாடி துணை ஆய்வாளர் முத்துக்குமாரசாமி, நசுருதீன் தனிப்பிரிவு ஏட்டு சாலமன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தானிப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை மடக்கி விசாரித்ததில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டீ மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் 33 குரும்பலூர் மணிகண்டன் 28 வேலூர் கமால் 35 தரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரசூலுல்லாஹ் 38 அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் கிடைத்தவரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து 370 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
தண்டராம்பட்டு காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.