18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புளியங்குடி காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்-வர்த்தக சங்க பிரதிநிதிகள்,வணிகர்கள் பங்கேற்பு..

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புளியங்குடி காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்-வர்த்தக சங்க பிரதிநிதிகள்,வணிகர்கள் பங்கேற்பு..

எழுதியவர்: Askar April 20, 2020, 9:04 am

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புளியங்குடி காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்-வர்த்தக சங்க பிரதிநிதிகள்,வணிகர்கள் பங்கேற்பு..

புளியங்குடி காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறையினர், வணிகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கொரோனா பரவலை தடுக்க பல்வேறு ஆலோசனைகளை முன்மொழிந்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் காவல் துறை சார்பில் வணிகர்கள் மற்றும் மார்க்கெட் வியாபாரி சங்க நிர்வாகிகள் கூட்டம் 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை காவல் ஆய்வாளர்கள் ஆடிவேல் மற்றும் அலெக்ஸ் ராஜ் துணை ஆய்வாளர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள் மார்க்கெட் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை காவல் துறையின் சார்பாக வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பாக டோர் டெலிவரி மூலம் வியாபார செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும். காவல்துறை நகராட்சியின் சார்பாக தன்னார்வலர்களை கொண்டு பொது மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு கொண்டு நேரடியாக விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் ஏ காஜா முகைதீன், நகர தலைவர் ராமகிருஷ்ணன், நகரச் செயலாளர் PNM ஷாஜஹான், மாவட்டத் துணைச் செயலாளர் மைதீன் பிச்சை Ex.Mc, காந்தி தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் இசக்கி ராஜாஜி தினசரி மார்க்கெட் தலைவர் சங்கர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!