தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3381 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும்
வகையில் மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,1122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3381 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.