விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவரான தாமரைக்கனி கடந்த சில தினங்களுக்கு முன் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கொலை வழக்கில் கைதான அண்ணாமலை ஈஸ்வரன் என்பவரது ஆட்டோவினை அதே பகுதியினை சேர்ந்த அய்யனார் என்பவரால் தீ வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்துள்ளனர்.
தகவலறிந்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் ஆட்டோவை கைப்பற்றி, கல்லூரி மாணவன் கொலை சம்மந்தமாக முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என வழக்கு பதிவு செய்து அய்யனார் (வயது 24) என்பவரை கைது செய்தனர். பழிக்கு பழியாக சம்பவம் அரங்கேறுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.