விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா மகன் அம்மையப்பன் 55. இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை அனுமதித்த காலத்தில் சாராய விற்பனையில் செய்து வந்தவர். தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
மது பிரியரான இவர் மது குடிக்காமல் இருக்க முடியாத சூழ்நிலையில் தான் குடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்து வேலை செய்யக்கூடிய தோப்பில் சாராய ஊறல் போட்டு அதில் சாராயம் காய்ச்சி குடித்து வந்து மற்றும் விற்பனையில் ஈடுபட்டது சேத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சேத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஊறலை அழித்து அவரிடமிருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.