கொரோனா தொற்று தடுக்கும் விதமாக இரவு பகலாக அயராது உழைத்து வரும் காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினரின் சேவையை பாராட்டி கவுரவிப்பு!
திண்டுக்கல் மாநகராட்சி 15, 16, 17,வது வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான
குப்புசாமி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் மளிகை பொருட்களும், முக கவசங்கள் மற்றும் கையுரைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் காவல் ஆய்வாளர் தங்கராஜ் சார்பு ஆய்வாளர் விஜயலட்சுமி , முத்திரைத்தாள் தனி தாசில்தார் கே,பிரபா. மற்றும் துப்புறவு மேற்பார்வையாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய உணவு பாதுகாப்பு துறை ஆலோசனை குழு உறுப்பினர் A.M. முபாரக் அலி, அவர்கள் வழக்கறிஞர்,குப்புசாமி அவர்களுக்கு சால்வை அனுவித்தார், அதேபோல் வழக்கறிஞர் ,குப்புசாமி அவர்கள் காவல் ஆய்வாளர், தங்கராஜ். சார்பு ஆய்வாளர். விஜயலட்சுமி , தனிதாசில்தார். பிரபா. மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் சேவையை பாராட்டி சால்வை அணிவித்தார் இந்த நிகழ்வில், பிரேம்குமார்.விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.




You must be logged in to post a comment.