17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டதால் முட்டை வாங்க கூட்டம் அலைமோதியது.

உசிலம்பட்டியில் இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டதால் முட்டை வாங்க கூட்டம் அலைமோதியது.

எழுதியவர்: mohan April 19, 2020, 4:45 pm

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் இறைச்சிக் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் இறைச்சிக்கடைகள் செயல்பட மதுரை ஆட்சியர் தடைவிதித்தார்.இதனையடுத்து உசிலம்பட்டிப் பகுதியில் இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டன.இதனால் இறைச்சி வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.அவர்களின் பார்வை முட்டை மீது திரும்பியதால் உசிலம்பட்டியிலுள்ள முட்டைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.காலை முதலே பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் பொறுமையுடன் நின்று முட்டையை வாங்கிச் சென்றனர்.சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு முட்டை கடைக்காரர்கள் முட்டை வழங்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.உசிலம்பட்டி பகுதியில்; மொத்த விற்பனைக்கடையில் முட்டை ரூ5க்கு விற்பனை செய்யப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!