உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் 8வது வார்டு கருக்கட்டான்பட்டி காலணியில் 200 க்கும் மேற்பட்ட மக்களுக்கு தன்னார்வலர் புதூர் பெரிய கருப்பன் பிரியாணி, முட்டையை உணவாக வீடு வீடாக சென்று உணவு வழங்கினார்.இவரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.