மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது மொண்டிக்குண்டு கிராமம்.இக்கிராமத்திலுள்ள மலை அடிவாரத்தில் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.இதனையடுத்து உசிலம்பட்டி காவல்துறை ஆய்வாளர்
சார்லஸ் தலைமையிலான உத்தப்பநாயக்கனூர் போலிசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.அங்கே மலை அடிவாரத்தில் ஒரு மயிலின் தலையும் இறக்கைகளும் கிடந்தது.உடல் பகுதியைக் காணவில்லை.இதனால் இரை தேடி மலை அடிவாரத்திற்கு வழி தவறி வந்த மயிலை நாய் கடித்து இறந்திருக்கலாம்.மயிலின் உடல் பகுதியை நாய் சாப்பிடடு விட்டு வேறு பகுதியில் வீசியிருக்கலாம் என போலிசார் தெரிவித்தனர்.இது குறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில் சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலிசாரும் வனத்துறையினரும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு மலை அடிவாரத்தில் மயில்கள் கொல்லப்பட்டதா .போலிசார் விசாரணை.
எழுதியவர்: mohan April 19, 2020, 3:47 pm




You must be logged in to post a comment.